தொழுகையில் நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் நினைவில் மூழ்குவது எருமை ,கழுதையின் நினைவில் மூழ்குவதை விடவும் மோசமானது
நூல் : ஸிராத்தே முஸ்தகீம் ,பக்கம் 86 ,பார்ஸி பதிப்பகம்
நூல் : ஸிராத்தே முஸ்தகீம் ,பக்கம் 86 ,பார்ஸி பதிப்பகம்
சிராத்தே முஸ்தகீம் பார்சி
புதிய பதிப்பு
இங்கு மேலே முதலில் காணப்படுவது 'சிராத்தே முஸ்தகீம்' நூல் ,ஹிஜ்ரி 1308 ல் ,மக்தபா முஜ்தபாய் தில்லி பதிப்பித்தது ,ஆசிரியர் -இஸ்மாயில் திஹ்லவி . சிலர் நூல் ஆசிரியர் இஸ்மாயில் திஹ்லவி இல்லை என்கின்றனர் ,அது குறித்து பின்னர் காண்போம் .
பார்சி மொழியில் வெளிவந்தது தான் மூல நூல் . இந்த நூல் பாகிஸ்தானில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது . இந்த நூலை மொழிபெயர்த்து ,எழுதியது இஸ்மாயில் திஹ்லவி இல்லை என்றால் அவரது பெயரை மொழிபெயர்ப்பாளர் ,நூல் ஆசிரியர் என்று குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன ?
லாகூர் மாலிக் சிராஜ்ஜுதீன் அண்ட் சன்ஸ் ஆகியோரால் பதிப்பிக்கப்பட்டு நவம்பர் 1956ல் வெளிவந்தது . இந்த நூல் அவர்களின் கொள்கை சகோதர்களால் தான் மொழிபெயர்க்கப்பட்டது .
தொழுகையில் உங்கள் மனைவியோடு நீங்கள் தனிமையில் நெருக்கமாக இருப்பது நினைவில் வந்தால் நீங்கள் அந்த நினைப்பில் இருப்பதே சிறந்தது . உங்கள் ஷெய்குமார்களோ அல்லது பெரியார்களின் நினைவில் மூழ்குவதைக் காட்டிலும் ,அல்லது நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் நினைவில் மூழ்குவது எருமை ,கழுதையின் நினைவில் மூழ்குவதை விடவும் மோசமானது . நவூதுபில்லாஹ் !
இன்னும் அவர் வாதிக்கின்றார் எருமை ,கழுதை போன்றவை அற்பமானவை ,அவற்றின் நினைவு உங்களை ஆக்கிரமிக்காது . ஆனால் ஷெய்குமார்களின் மீதான மரியாதையால் உங்களின் நினைவு அவ்ர்களைக் கொண்டு ஆக்கிரமித்து விடும் . சங்கையான ஒன்றினை தொழுகையில் நினைத்தால் அது ஷிர்க்கில் கொண்டு சேர்த்து விடும் .
நாயகம் صلى الله عليه و سلم அவர்களை நினைவு கூறும்போது அதனுடன் மரியாதை ,சங்கை சேர்ந்து விடுவதால் ,தொழுகையில் அவ்வாறு நினைவு கூறுவது ஷிர்க் என்கிறார் .
இனி இஸ்மாயில் திஹ்லவியிடம் கேட்கப்படும் கேள்வி , நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் பெயர் உபயோகிக்காமல் தொழுகையே நிறைவேறாது . இனி ஸுன்னத் வல் ஜமாத்தினர் நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் சங்கைமிகு திருமநாமத்தை உபயோகம் செய்து , அதனுடன் கூடுதலாக ஸலாமை எத்தி வைத்து ,அவர்களை மரியாதையுடன் நினைவு கூறுகின்றோம் .
و رحمت اللہ و برکاتہ السلام عليك أيها النبي
படைப்பினங்களின் காரணமாம் எம்பருமான் முஹம்மது முஸ்தபா صلى الله عليه و سلم அவர்களை நினைவு கூறாமல் இருப்பது எங்கனம் சாத்தியம் ?
நினைவு கூறுவதன் பெயரில் இரண்டு நிபந்தனைகளே உள்ளன , மரியாதையுடன் அல்லது அவமரியாதையுடன் !
சிராத்தே முஸ்தகீம் - உர்து
நாயகம் صلى الله عليه و سلم அவர்களை இழிவுடன் ,அவமரியாதையுடன் , வெறுப்புடன் , தாழ்மையாக நினைப்பது அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல என்பது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் இஜ்மா வாகும் .
நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் மீது யாராகிலும் எந்தவிதமான அவமரியாதையும் வெளிப்படுத்த முடியாது.
நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் சங்கைமிகு ஆடைகளை (லிபாஸ் முபாரக் ) அசுத்தமானது என்று அவமதிக்கும் வகையில் கூறுவது கூடாது .
அவ்வாறு யாராகிலும் கூறினால் அவனது ஈமான் பறிபோய் விடும் .
அதேபோன்று நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் சங்கைமிகு பாதணிகளை (நாளைன் ஷரீப் ) அவமதிப்புடன் அழைப்பது அனுமதி மறுக்கப்பட்ட செயல் .
யாராகிலும் அதனை 'குட்ரி' என்று கூறினால் அவன் காஃபிராகி விடுவான் .ஏனெனில் அவ்வாறு அழைப்பது அவமதிப்பின் ஓர் அடையாளம் .
நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் ஆளுமை மற்றும் பண்புகளை மறுத்து விவரிப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை . இனி நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் நினைப்பு தொழுகையில் வரும் ,இன்னும் அவர்களை சங்கைப்படுத்தும் விதமாக வரும் .
தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தை பொறுத்தவரை தொழுகையில் நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் நினைவில் மூழ்குவது எருமை ,கழுதையின் நினைவில் மூழ்குவதை விடவும் மோசமானது என்று நினைக்கவும் செய்கின்றார்கள் ,எழுதியும் வைத்துள்ளார்கள் .
அவர்கள் தங்களின் நினைப்பை ஆய்வு செய்துள்ளனர் . தொழுகையில் மனைவியுடன் தனிமையில் இருக்கும் நினைவு வருவது கேடான உறவை விட மேலானதாகும் . அடுத்து , தொழுகையில் நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் நினைவில் மூழ்குவது எருமை ,கழுதையின் நினைவில் மூழ்குவதை விடவும் மோசமானது . என்னே ஓர் அவமரியாதை !
இன்னும் அவரின் அபிமானிகள் நாம் தவறாக மேற்கோள் காட்டினோம் என்று பரப்புவர் ,இதன் காரணமாகவே நாம் பார்ஸி மற்றும் உர்து மொழியில் உள்ள மூல நூற்களை பதிவு செய்துள்ளோம் .
இஸ்மாயில் திஹ்லவியின் சமகாலத்தவரான ,அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி ,இஸ்மாயில் திஹ்லவி மீது குப்ர் பத்வா வெளியிட்டார்கள் . இன்னும் அவர் தவ்பா செய்து ,மனம் திருந்தினார் (ருஜு ) செய்தார் என்றும் செய்திகள் உண்டு . இதன் காரணமாக சிலர் இஸ்மாயில் திஹ்லவி யைப் பற்றி தமது கருத்தை கூறுவதில்லை .
இன்னும் அவர்களின் நவீன மோசடிகளில் நின்றும் ஒன்று , இந்த நூற்களுக்கும் இஸ்மாயில் திஹ்லவிக்கும் சம்பந்தம் இல்லை என்பது .
தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,தமது நூல் 'தாலிபாத்தே ரஷீதியா' ,பக்கம் 241 ல் எழுதியுள்ளதை கவனியுங்கள் .
ரஷீத் அஹ்மத் கங்கோஹியிடம் கேட்கப்பட்டது , "தக்வியத்துள் ஈமான் ,சிராத்தே முஸ்தகீம் , இதா உல் ஹக் நூற்களை எழுதியது யார் ? அதற்கு அவர் இஸ்மாயில் திஹ்லவி என்று பதில் கூறியுள்ளார் " . உங்களது கூற்றுக்கு எதிராக ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் ஆதாரப்பூர்வமான இந்த பதிலுக்கு என்ன மறுப்பு சொல்ல போகின்றீர்கள் .














No comments:
Post a Comment