Thursday, January 17, 2019

கொள்கை வேறுபாடு - 5

அல்லாஹ் سبحانه و تعالى , நாயகம்  صلى الله عليه و سلم அவர்களுக்கு  எந்த அளவுக்கு மற்றும் எந்த வகையான மறைவான ஞானத்தை கொடுத்திருக்கின்றானோ ,அதே போன்று விலங்குகள் ,பைத்தியக்காரர்கள்
,குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கின்றான் 

நூல் - ஹிப்ளுள் ஈமான் ,பக்கம் 7 ,எழுதியவர் அஷ்ரப் அலி தான்வி ,காஷ்மீரி பஜார் ,லாகூர் ,ஜூன் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த நூல் .






நவூதுபில்லாஹ் 

அதன் புதிய பதிப்பும் உள்ளது .அதில் பக்கம் 7 ல் எழுதப்படுள்ளதாவது ,

" நாம் முஹம்மது صلى الله عليه و سلم அவர்களுக்கு  இல்முல் கைப் (மறைவான ஞானம் ) வழங்கப்படுள்ளது என்று நம்பிக்கை கொண்டால் , அவர்கள் எந்த வகையிலான மறைவான ஞானம் அளிக்கப்பட்டுள்ளார்கள் ?

இனி கேள்வி என்னவெனில் ,நாயகம் அவர்களுக்கு அளிக்கப்பட்டது பஜ் உலூமே கைபியாவா ( மறைவான ஞானத்தின் ஒரு பகுதி ) அல்லது குல் உலூமே கைபியாவா  ( முழுமையான மறைவான ஞானம் )    என்பதே ?

இனி பஜ் உலூமே கைபியா ( மறைவான ஞானத்தின் ஒரு பகுதி )  தான் அளிக்கப்பட்டது என்றால் , அதில் நாயகம் صلى الله عليه و سلم அவர்களுக்கு பிரத்யேகமான விஷயமோ அல்லது மேன்மையோ என்று என்ன உள்ளது .

இவ்விதமான ஞானமோ ஜைத் ,அம்மார் என்று எல்லோருக்கும் அளிக்கப்படுள்ளது .இன்னும் சொல்லப்போனால் எல்லா (மஜ்னுன் ,ஹைவான் ) பைத்தியக்காரர்கள் ,விலங்குகளுக்கும் அளிக்கப்படுள்ளது ."

நாயகம் صلى الله عليه و سلم அவர்களைப் பற்றி இவ்விதம் அஷ்ரப் அலி தான்வி எழுதியுள்ளார் .

எல்லோரும் ,தன்னை தவிர பிறர் அறியாத ஒன்றினைப் பற்றிய ஞானம் கொண்டுள்ளதால் எல்லோரையும் ஆலிமே கைப் என்று அழைக்க வேண்டும் என்று எழுதியுள்ளார் அஷ்ரப் அலி தான்வி .

இனி அஷ்ரப் அலி தான்வி கண்மணி நாயகம் صلى الله عليه و سلم அவர்களைப் பற்றி கூறியுள்ளதை அல்லாமா கவ்காப் நூரானி ஒகார்வி அவர்கள் தமது நூலில் விளக்குகின்றார்கள் .

உண்மையில் யாரோ ஓர் நபர் அஷ்ரப் அலி தான்வியிடம் கேள்வி கேட்கின்றார்கள் . கேள்வி என்னவெனில் ஜைத் (யாரையேனும் பொதுவாக குறிப்பிட அரபியில் இவ்வாறு சொல்லுவது வழக்கம் ஜைத் ,அம்ரு என்று )  கேட்கின்றார் ,இல்முல் கைப் இரண்டு வகைப்படும் . பீ ஜாத் (சுயமாக ) அதாவது அல்லாஹ் سبحانه و تعالى வைத் தவிர ஆலிமுல் கைப் கிடையாது . பா வாஸ்தா (உதவிகொண்டு ) ,அதாவது நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் அலிமுல் கைப் .

 ஜைத் தின் வாதம் எவ்வாறு உள்ளது ? அவர் இரு விஷயங்களைக் கேட்கின்றார் . பீ ஜாத் (சுயமாக ) மறைவான ஞானத்தை தானே அறிந்து கொள்வது  . பா வாஸ்தா ( உதவிகொண்டு ) என்பது  அல்லாஹ் سبحانه و تعالى வால் ,நாயகம்  صلى الله عليه و سلم அவர்களுக்கு வழங்கப்பட்டது . இது என்ன மாதிரியான வாதம் ?

ஜைத் ,இவ்வாறான அகீதா மற்றும் இஸ்தித்லாலை , நாயகம்  صلى الله عليه و سلم அவர்களுக்கு வழங்கப்பட்ட மறைவான ஞானம் குறித்து   வைத்துக் கொள்வதைப் பற்றி கேட்கின்றார் .

முதலாவதாக ,அஷ்ரப் அலி தான்வி அலிமுல் கைப் என்ற வாக்கியம்  நாயகம் صلى الله عليه و سلم அவர்களுக்கு பயன்படுத்த முடியாது என்கின்றார் .

ஒரு குறிப்பிட்ட சொல்லை ,குறிப்பான ஒன்றின் மீது பயன்படுத்துவதற்கு இத்லாக் என்று சொல்லப்படும் . ஏதாவது ஒன்றைக் கொண்டு ஏதேனும் ஒன்று நிரூபிக்கப்பட்டால் ,அதனை ஹுக்கும் என்பர் .  சில சமயங்களில் ஹுக்குமும் ,இத்லாக்கும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படுகின்றன ,எனினும் சமயங்களில் ஹுக்கும் உண்மை என்று நிரூபணம் ஆகும் ,இத்லாக் அவ்வாறு அல்ல .







ஆலிமுல் கைப் என்னும் சொற் பிரயோகம் பயன்படுத்த தடை செய்யப்பட்ட ஒன்று . ஞானத்தின் மூலம் முழுமையான மறைவான ஞானம் என்பது சாத்தியம் அல்ல . நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் முழுமையாக மறைவான விஷயங்களைப் பற்றி அறிவார்கள் என்பது ஞானத்தைக் கொண்டு நிரூபிக்க இயலாத விஷயம் . 

அல்லாஹ் سبحانه و تعالى  வால் அளிக்கப்பட்ட ,மறைமுகமான இல்முல் கைப் ,பாஜ் (ஒரு பகுதி ) தான் என்றால் அஷ்ரப் அலி தான்வி எழுதுகின்றார் இது இல்முல் கைபை நாயகம் صلى الله عليه و سلم அவர்களுக்கு அளிக்கப்பட்டது என்றால் ,இது உண்மை என்று இருக்கும் பட்சத்தில் (அஷ்ரப் அலி  தான்வி இதை ஒத்துக்கொள்ள மறுக்கின்றார் ) கேள்வி என்னவென்றால் அது குல் கைப் பா அல்லது பாஜ் கைப் பா என்பது தான் ?

அது குல் கைப் அல்ல பாஜ் கைப் தான் என்றால் ,அதைக் கொண்டு  நாயகம் صلى الله عليه و سلم அவர்களுக்கு அதில் எந்த சிறப்பும் இல்லை , அது போன்ற இல்மே கைப் எல்லோருக்கும் கொடுக்கப்படுள்ளது , எல்லா மதழைகள் ,விலங்குகள்,மிருங்ககளுக்கும் கொடுக்கப்படுள்ளது . இங்கு நாயகம்   صلى الله عليه و سلم அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஞானம் குழந்தைகள் , விலங்குகள் மற்றும் பைத்தியக்காரர்களின் ஞானம் போன்றது என்று கூறியுள்ளது நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் பால் செய்யப்பட்ட மோசமான அவமரியாதையாகும் .

இந்த கடுமையான அவமரியாதைக்கு அஷ்ரப் அலி தான்வி இது வரை தவ்ஃபா கேட்டதில்லை . சிலர் கூறுகின்றனர் தமது நூலின் பிந்தைய பதிப்புகளில் அஷ்ரப் அலி தான்வி இத்தகைய சொற் பிரயோகத்தை மாற்றி விட்டார் . அவர் விலங்குகள் மற்றும் பைத்தியக்காரர்கள் என்னும் சொற்களுக்கு பதிலாக கைர் அன்பியா என்று பயன்படுத்தியுள்ளார் . ஆனால் இவை ஒன்றும் அவரது மன்னிப்புக்கான ஆதாரமல்ல.

இன்று தென்னிந்தியாவில் ,குறிப்பாக தமிழகத்தில்  தங்களையும் ஸுன்னத் வல் ஜமாஅத் ,தரீக்கா வழி நடப்பவர்கள் என்று போலியாக தாவா செய்து வரும் தப்லீக் ஆதரவு நூரிஷா தரீகத்தினர்  (நூரிஷா ,ஜமாலிஷா ,பைஜிஷா , ,ஜூஹூரி ஷா ,பிலாலி ஷா ,நிஜாமி ஷா ,முஹிப்பி ஷா ) போன்றவர்கள் அஷ்ரப் அலி தான்வி தவ்பா செய்து விட்டார் பொய் பரப்புவது உண்மையானால்  அதற்கான ஆதாரத்தை சமர்பிக்கட்டும் . 

இது விஷயமாக முரண்பட்டு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினருடன் சண்டையிடுபர்களும் தவ்பா தேடிக்கொள்ளட்டும் . இன்னும் சிலர் அதில் உபயோகப்படுத்தப் பட்டுள்ள 'ஐஸா' என்னும் வார்த்தை இது மாதிரி அல்லது முடிந்த அளவு என்னும் பொருள் தான் தருகின்றது என்று சப்பை கட்டு கூறுவோர் சிந்திக்கட்டும் அந்த வார்த்தைப் பிரயோகம் மிகவும் அவமரியாதையுடனும் ,போலித்தனத்துடனும்  பிரயோகப் படுத்தப்பட்டுள்ளது . ஈருலக இரட்சகர்  நாயகம் صلى الله عليه و سلم அவர்களது ஞானத்தை விலங்குகளுடன் ஒப்பீடு செய்வது என்பது கடுமையான மூர்க்கத்தனமான செயலாகும் .

அஷ்ரப் அலி தான்வி தவ்பா செய்யவுமில்லை , சொற்களை மாற்றவுமில்லை ,இது தான்வியின் மூர்க்கமான செயலாகும் .          





No comments:

Post a Comment

கொள்கை வேறுபாடு - 7

ரஹ்மத்துல் ஆலமீன் என்ற சொல் நாயகம்   صلى الله عليه و سلم   அவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரத்யேகமான பண்பு அல்ல . நாயகம் அவர்களைத் தவிர்த்த...