ரஹ்மத்துல் ஆலமீன் என்ற சொல் நாயகம்
صلى الله عليه و سلم அவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரத்யேகமான பண்பு அல்ல . நாயகம் அவர்களைத் தவிர்த்து பிற இறை அடியார்களையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம்
[பதாவா ரஷீதியா , பாகம் 2, பக்கம் 12 ]
صلى الله عليه و سلم அவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரத்யேகமான பண்பு அல்ல . நாயகம் அவர்களைத் தவிர்த்து பிற இறை அடியார்களையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம்
[பதாவா ரஷீதியா , பாகம் 2, பக்கம் 12 ]
பதாவா ரஷீதியாவை எழுதியது தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி . இதை ஹிஜ்ரி 1357ல் பதிப்பித்தது குதுப் கானா ரஹீமியா ,சுனேரி மஸ்ஜித் ,தில்லி . இது க்வாஜா பக்ரி பிரஸ் ,தில்லி வெளியிட்டது . அதில் பக்கம் 9 ல் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது .
கேள்வி : ரஹ்மதுல் ஆலமீன் என்னும் பட்டம் நாயகம் முஹம்மது
صلى الله عليه و سلم அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக பயன்படுத்தப்படுவதா ?அல்லது வேறு யாரையாகிலும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைப்பது கூடுமா ?
பதில் : ரஹ்மத்துல் ஆலமீன் என்னும் பண்பு(ஸிபத் ஏ காஸ் ) நாயகம் صلى الله عليه و سلم அவர்களுக்கு மட்டும் உபயோகப்படுத்தப்படுவது அல்ல , ஏனைய பிற அன்பியாக்கள் ,அவ்லியாக்கள் ,உலமாயே ரப்பானி ஆகியோருக்கும் இந்த பட்டத்திற்கான பண்பு கொண்டவர்கள் .
அவர்களைக் கொண்டும் இவ்வுலகம் நன்மாராயம் பெறுகின்றது ,என்றாலும் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் யாவரைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் . எனவே ஏனையோரை ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம் .
தாலிபாத்தே ரஷீதியா ,பக்கம் 241
தேவ்பந்திகளோ தப்லீக் ஜமாத்தினரோ தங்களைத் தான் உலமாயே ரப்பானி என்று அழைத்துக் கொள்கின்றனர் . என்ன சொல்ல வருகின்றார்கள் இவர்கள் ? நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் மிகப் பெரிய ரஹ்மத்துல் ஆலமீன் ,நாங்கள் சிறிய ரஹ்மத்துல் ஆலமீன் என்றா ? மஆதல்லாஹ் !
இவர்களைப் பொறுத்த வரை ரஹ்மத்துல் ஆலமீன் என்பது நாயகம் صلى الله عليه و سلم அவர்களுக்கு உரிய பிரத்யேகமான பண்பு அல்ல . இது குர்ஆன் ஷரீபின் கூற்றை மறுக்கும் செயல் அல்லவா ?
அவர்களது நூல் தாலிபாத்தே ரஷீதியாவிலும் இதே கருத்தைக் காணலாம் .




No comments:
Post a Comment